உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார்

தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார்

திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த தாடி பாலாஜி அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். குறிப்பாக 'கலக்கப்போவது யாரு' தொடரில் தொடர்ச்சியாக நடுவராக பணியாற்றினார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தற்போது அவர் உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவ உதவியாக ஒரு லட்சம் ரூபாயை திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான பி.டி செல்வகுமார் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாலாஜி கூறியதாவது: என் முதல் படமே பி.டி. செல்வகுமாரின் படம் தான். அப்போது இருந்தே சின்ன சின்ன உதவி பண்ணியவர், இன்று பெரிய உதவியை செய்துள்ளார். அன்றிலிருந்து அவரின் நன்றியை மறந்ததில்லை. உடலில் சில மாறுதல், வலி இருந்தது. அனைத்துவிதமான மருத்துவ சோதனை செய்தும், நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். பின்னர், தெரிந்தவர் மூலம் ஒருவரிடம் சோதனை செய்ததில், உடலில் இருந்த பிரச்னை தெரிந்தது. அப்போது அண்ணா ஒரு ஹெல்ப் என ஒரேஒரு மெசேஜ் மட்டும்தான் போட்டேன். உடனே வந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !