ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம்
ADDED : 6 hours ago
ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹிந்தியில் வெளியான படம் 'தேரே இஸ்க் மே' . இத்திரைப்படத்திற்கு வட இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று இப்படம் இரண்டு வாரங்களில் உலகளவில் ரூ. 150.02 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர். இது தனுஷின் 2வது 150 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியளவில் இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் நெட் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.