3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி
கடந்த 2009ம் ஆண்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர் கான், சர்மான் ஜோஷி, மாதவன், கரீனா கபூர் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் '3 இடியட்ஸ்' . இந்த படத்தை தமிழில் ஷங்கர் 'நண்பன்' என்கிற பெயரில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'டன்கி' படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து அவரும், அமீர் கானும் இணைந்து 'தாதா சாகிப் பால்கே' வாழ்க்கை வரலாற்றை படமாக்க பணியாற்றி வந்தனர். அவர்களுக்கே திரைக்கதை திருப்தி அளிக்காததால் கைவிட்டனர்.
இந்த நிலையில் நீண்ட வருடங்களாக பாலிவுட் ரசிகர்கள் காத்திருந்த 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை பணியை ராஜ்குமார் ஹிரானி தொடங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். முதல் பாகத்தில் அமீர் உள்ளிட்ட நடிகர்களே இதிலும் தொடருகிறார்களாம்.