படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா?
ADDED : 72 days ago
கடந்த 1999ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'படையப்பா'. 25 ஆண்டுகளுக்கு பிறகு படையப்பா படம் டிசம்பர் 12ம் தேதியான இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு உலகளவில் ரீ ரிலீஸ் ஆகி உள்ளது. இதுவரை படையப்பா ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் டிக்கெட் முன்பதிவின் மூலமாகவே ரூ. 1 கோடியை கடந்துள்ளது என விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். முதல்நாள் வசூலில் 2 முதல் 3 கோடி வசூல் ஆகலாம் என கூறப்படுகிறது.