முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா!
2025ம் ஆண்டில் தெலுங்கில் ஸ்ரீ லீலா நடித்த 'ராபின் ஹூட்' மற்றும் 'மாஸ் ஜதாரா' போன்ற படங்கள் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாகவே பாலிவுட் பக்கம் திரும்பிய ஸ்ரீ லீலா அங்கு கார்த்திக் ஆரியனுடன் இணைந்து தனது முதல் படமாக 'து மேரி ஜிந்தகி ஹை' என்ற படத்தில் நடித்து முடித்திருப்பவர், அதையடுத்து தற்போது 'டைலர்' என்ற படத்தில் இப்ராஹிம் அலிகானுடன் ஜோடி சேர்ந்துள்ள ஸ்ரீலீலா, 'சூமந்தர்' என்ற இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படி பாலிவுட்டில் தான் நடித்துள்ள முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் அவர் கமிட்டாகி உள்ளார். இது குறித்து ஸ்ரீ லீலா வெளியிட்டுள்ள செய்தியில், 'பாலிவுட்டிற்கு போன வேகத்திலேயே எனக்கு மூன்று படங்கள் கிடைத்திருப்பதற்கு முக்கிய காரணம் 'புஷ்பா-2' படத்தில் நடனமாடிய 'கிஸ்ஸிக்' பாடல்தான். இந்த பாடலில் நான் ஆடிய நடனம் பெரிய அளவில் பாலிவுட் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகையும் கவர்ந்தது. அதனால்தான் பாலிவுட்டில் அடுத்தடுத்து புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்' என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ லீலா.
மேலும், தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராசக்தி' படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.