சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா'
ADDED : 14 minutes ago
பல்டி படத்திற்கு பிறகு பரத் மோகன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடித்துள்ள படம் மெஜந்தா. அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ள இந்த படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தருண் குமார் இசையமைத்துள்ள இந்த மெஜந்தா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சாந்துனு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், எங்களது அடுத்த படமாக மெஜந்தாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மெஜந்தா என்ற நிறத்துக்கு பின்னால் ஒருபோதும் அவள் எதிர்கொள்ள விரும்பாத ஒரு உண்மை மறைந்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கும் சாந்தனு, விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.