11 மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்
கடந்த ஜனவரி மாதம் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் முதன் முதலாக மலையாளத்தில் இயக்கிய டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. மம்முட்டி கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், கதாநாயகியாக சுஸ்மிதாபட் ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு தனியார் டிடெக்டிவ் அதிகாரியாக மம்முட்டி நடித்திருந்தார். தவறவிடப்பட்ட ஒரு பெண்ணின் பர்ஸை அவரிடம் ஒப்படைப்பதற்காக செல்லும் மம்முட்டி அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய கொலை வழக்கு ஒளிந்திருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து குற்றவாளி யார் என்பதை வெளிக்கொண்டு வருவது தான் இந்த படத்தின் கதை.
கவுதம் மேனன் தனது பாணியில் மிகவும் ஸ்டைலிஷ் ஆக இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் டீசன்டான வரவேற்பை பெற்றது. அதேசமயம் இந்த படத்தை ஓடிடியில் பார்க்க பல ரசிகர்கள் ஆவலாக இருந்தாலும் சில காரணங்களால் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது 11 மாதங்கள் கழித்து வரும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் இந்த படம் ஜி5 ஓடிடி தளத்தில் வழியாக இருக்கிறது..