உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'

ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'

படத்திற்கு 'கம்பெனி' என்று சேர்த்து பெயர் வைத்துவிட்டு படத் தயாரிப்பில் உள்ள இரண்டு கம்பெனிகளான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் வெளியீடு தள்ளிப் போவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

டிசம்பர் 18 வெளியீடு என்று அவர்கள் அறிவித்த தேதி நாளை மறுநாள் வருகிறது. இந்த ஆண்டில், 'டிராகன், டியூட்' என இரண்டு 100 கோடி படங்களையும், அதில் அதிக லாபத்தைக் கொடுத்த ஒரு படம் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் பிரதீப் ரங்கநாதன். அப்படி ஒரு ஹிட் கொடுத்த நாயகனை வைத்து படம் தயாரித்துவிட்டு பட வெளியீட்டில் இப்படி ஒரு தடுமாற்றத்தை இந்தப் படத்தின் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்தி வருகின்றன.

இந்தப் படம் வெளிவந்து ஓடினால், இந்த ஆண்டில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நாயகன் என்ற பெருமை பிரதீப் ரங்கநாதனைச் சேரும். 100 கோடி வசூலித்தால் ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி கொடுத்த ஒரே நாயகன் என இன்னொரு பெருமையும் சேரும்.

அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பட வெளியீட்டின் பின்னணியில் வேறு யாரோ சதி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஏற்கெனவே அக்டோபர் 17, தீபாவளி வெளியீடு என அறிவித்து கடைசி நேரத்தில் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்றும் அறிவித்து போட்டிக்கு வந்த 'டியூட்' படம் குறித்தும் 'ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் சென்று மோதினால் யாருக்கும் பலனில்லை' என்று குறிப்பிட்டார்கள். இப்போது என்ன சொல்லப் போகிறார்களோ ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !