உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி

களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி

மலையாளத்தில் கடந்த வாரம் மம்முட்டி மற்றும் வில்லன் நடிகர் விநாயகன் நடிப்பில் களம்காவல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஜித்தின் கே.ஜோஸ் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் வித்தியாசமான அம்சமாக மம்முட்டி வில்லனாகவும், விநாயகன் ஹீரோவாகவும் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மம்முட்டி தானே சொந்தமாக தயாரித்த இந்த படம் தற்போது வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தான் மட்டுமே இந்த வெற்றியில் பங்கு கொள்ளாமல் நடிகர் விநாயகனையும் அழைத்து தன்னுடன் அமர வைத்து இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்றை மம்முட்டி வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !