உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா?

சூர்யாவின் இரண்டு படங்களும் ஒரே மாதத்தில் வெளியாகிறதா?

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 46வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ள இந்த படத்தில் ஏற்கனவே தான் நடித்த கஜினி படத்தில் இடம்பெற்ற சஞ்சய் ராமசாமி கெட்டப்பில் நடித்துள்ளார் சூர்யா. இந்த படத்திற்கான டைட்டில் குறித்து இதுவரை படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை என்றாலும், குடும்ப பின்னணி கதையில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று டைட்டில் வைக்க இயக்குனர் வெங்கி அட்லூரி முடிவெடுத்திருப்பதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த 46வது படம் அதே ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !