உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரு பாட்டுக்கு நடித்த முதல்வர் ஸ்டாலின்

பிளாஷ்பேக்: ஒரு பாட்டுக்கு நடித்த முதல்வர் ஸ்டாலின்


1988ம் ஆண்டு வெளிவந்த படம் 'மக்கள் ஆணையிட்டால்'. இந்த படத்தை ராம நாராயணன் இயக்கி, தயாரித்தார். விஜயகாந்த், ரேகா, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதினார். ஊழல் அரசியல்வாதியை எதிர்த்து இரண்டு இளைஞர்கள் போராடுவதுதான் படத்தின் கதை.

இந்த படத்தின் பாடல்களை இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரே எழுதியிருந்தார். 'ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாருங்க' என்ற பாடலை மட்டும் கருணாநிதி எழுதியிருந்தார். இந்த பாடலுக்கு ஸ்டாலின், அவராகவே நடித்திருந்தார். திமுக இளைஞரணி தொண்டர்களோடு அவர் உற்சாக நடைபோட்டு பாடுவதாக பாடல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் இப்போதும் தேர்தல் பிரசார பாடலாக திமுகவினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Raj S, North Carolina
2025-12-19 01:46:00

அப்புறமென்ன செவாலியர் விருது ஒன்னு குடுத்துட வேண்டியதுதானே??