'ஐ யம் கேம்' படத்தில் இணைந்த கயாடு லோகர்!
ADDED : 24 days ago
மலையாளத்தில் ‛ஆர்.டி.எக்ஸ்' பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து, கதாநாயகனாக 'ஐ யம் கேம்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் பிப், கதிர், மிஷ்கின், சாண்டி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது கயாடு லோகர் இணைந்து நடித்து வருவதாக இன்று படக்குழு அறிவித்துள்ளனர். மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.