உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்!

அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்!


கடந்த 2023ம் ஆண்டில் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் 'அயோத்தி'. இத்திரைப்படத்தை பார்த்த அனைவரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த இரண்டு வருடங்களாக இவரின் அடுத்த படத்தில் தனுஷ், மாதவன், லாரன்ஸ் ஆகிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் மந்திரமூர்த்தியின் அடுத்த படம் தமிழில் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இதனால் மந்திரமூர்த்தி தற்போது மலையாள நடிகர் மம்முட்டி உடன் புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படத்தின் கதைக்களம் கேரளா பின்னணியில் நடப்பது போல் உருவாக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !