உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைவிடப்பட்டதா விஷ்ணு விஷால், அருண் ராஜா காமராஜ் படம்?

கைவிடப்பட்டதா விஷ்ணு விஷால், அருண் ராஜா காமராஜ் படம்?


அருண் ராஜா காமராஜ் முதலில் நடிகராக 'ராஜா ராணி, மான் கராத்தே' படங்கள் மூலம் மக்களிடையே பிரபலமானார். இது அல்லாமல் அவர் 'நெருப்பு டா', 'வரலாம் வரலாம் வா', 'கொடி பறக்குதா', 'செம வெயிட்டு' உள்ளிட்ட பல பாடல்களை எழுதி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் 'கனா', 'நெஞ்சுக்கு நீதி', 'லேபிள் வெப் தொடர்' போன்ற படைப்புகளை ஒரு இயக்குனராக அருண் ராஜா காமராஜ் உருவானார். கடந்த வருடத்தில் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பிற்கு பிறகு இந்த படம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிக பட்ஜெட்டால் இப்படத்திலிருந்து வேல்ஸ் நிறுவனம் விலகியுள்ளனர். இதனால் விஷ்ணு விஷால், அருண் ராஜா காமராஜ் இருவரும் வேறு தயாரிப்பாளரை தேடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !