உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிவைப்பு: கவலையில் கீர்த்தி ஷெட்டி

அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிவைப்பு: கவலையில் கீர்த்தி ஷெட்டி


தெலுங்கில் முன்னணி நடிகை என்றாலும் தமிழில் என்ட்ரி ஆகி, இங்கே வெற்றி கொடுக்க துடிக்கிறார் கீர்த்திஷெட்டி. தெலுங்கில் நடித்த 'கஸ்டடி, வாரியர்' படங்கள் தமிழில் டப் ஆனாலும் இங்கே ஹிட் ஆகவில்லை. இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி நடித்த 'வா வாத்தியார், எல் ஐ கே' இந்த மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கோர்ட் பிரச்னை காரணமாக கார்த்தி நடித்த 'வா வாத்தியார்' ரிலீஸ் ஆகவில்லை. பல நாட்கள் படம் குறித்து பேசியது வீண் ஆகி விட்டதே என கவலையில் இருக்கிறார் கீர்த்தி ஷெட்டி.

அதேபோல் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அவர் நடித்த 'எல் ஐ கே' படமும் இந்த மாதம் ரிலீஸ் ஆகவில்லை. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த அந்த படத்தை பெரிதும் நம்பி இருந்தார் கீர்த்தி ஷெட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !