வாசகர்கள் கருத்துகள் (1)
சிறை
கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐந்துக்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆனது. சில வாரங்கள் 8, 10 என்ற எண்ணிக்கையில் கூட படங்கள் வந்தன. ஆனால் இந்த வாரம் பொன்ராம் இயக்கிய 'கொம்பு சீவி' படம் மட்டுமே நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. ஏன் இந்த வீழ்ச்சி என்று விசாரித்தால் நாளை 'அவதார்' அடுத்த பாகம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் வெளியாகிறது. அந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வமாக இருக்கும் நிலையில் தங்கள் படத்தை அதனுடன் போட்டி போட வேண்டாம் என்று உணர்ந்து பலர் பின் வாங்கி விட்டார்களாம். அவதார் படத்தின் வெற்றி எப்படி இருக்கும் என்று நாளை தெரிந்து விடும். அடுத்த வாரம் அருண் விஜய் நடித்த 'ரெட்ட தல', விக்ரம் பிரபுவின் 'சிறை', சுதீப் நடித்த 'மார்க்' உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே வெளி ஆக உள்ளது. அத்துடன் இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது.
இந்த படங்களில் ஏதாவது ஒன்று பெரிய வெற்றி பெறுமா? அல்லது ஆண் பாவம் பொல்லாதது தான் இந்த ஆண்டின் கடைசி வெற்றி படமாக இருக்குமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டுக்கு சில படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி எந்த பெரிய படமும் ரிலீஸ் ஆவதாக இல்லை.
பொங்கலுக்கு மட்டுமே விஜயின் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படங்கள் ரிலீஸ் ஆகிறது. அடுத்து சில வாரங்களும் புதிய படங்கள் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு தமிழ் பட ரிலீஸ் இன்னும் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறை