பெண் செய்யும்போது மட்டும் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் : நிகிலா விமல்
சமீபகாலத்தில் வாழை, குருவாயூர் அம்பல நடையில் என தொடர் வெற்றி படங்களில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை நிகிலா விமல். தற்போது மலையாளத்தில் பெண்ணு கேஸு என்கிற படத்தில் அவர் நடித்துள்ளார். இந்த படத்தில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட பல பேரை திருமண மோசடி செய்து ஏமாற்றும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிகிலா விமல். இதற்காக இந்த படத்தில் கிட்டத்தட்ட 13 விதமான மணப்பெண் தோற்றத்தில் அவர் நடித்துள்ளார். வரும் ஜனவரி 16ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
நிகிலா விமல் கூறும்போது, “வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் இந்த படத்தில் நடித்துள்ளேன். இதே கதாபாத்திரத்தை ஆண்கள் செய்தால் அதை பெரிதாக விமர்சிக்காதவர்கள், அதையே ஒரு பெண் செய்யும்போது நிறைய எதிர்மறை விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.