உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஐந்து அணிகள் மோதல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஐந்து அணிகள் மோதல்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் இப்போதைய சங்க தலைவர் முரளி ராமசாமி அணியும், அதற்கு போட்டியாக லைகா தமிழ் குமரன் அணியும், தயாரிப்பாளர் கதிரேசன் தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் ஒரு அணியும், சிறு பட தயாரிப்பாளர்கள் இணைந்து ஒரு அணிஎன மொத்தம் ஐந்து அணிகளாக மோதுகிறார்கள்.

இதில் சிலர் மட்டும் சில பதவிகளுக்கு மட்டும் போட்டியிடுகிறார்கள். இன்னும் சில நாட்களில் இந்த அணிகள் மாற அல்லது இந்த அணிகள் இணையும் வாய்ப்புள்ளது.

தயாரிப்பாளர் தேர்தலில் ஓட்டு போட 1500 பேர் தகுதியானவர்கள் மூன்று ஆண்டுகள் பதவி காலம் சங்க நிர்வாகிகள் பதவி காலமாக இருக்கிறது. இப்போதைய தலைவர் முரளி ராமசாமி ஆளுங்கட்சி ஆதரவு பெற்றவர் தமிழ் குமரன் பாமகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !