பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகியுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படத்தின் புரொமோஷன் பணிகளும் நடக்கின்றன. ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இரு தினங்களுக்கு முன் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் பயன்படுத்திய அந்தக்கால பொருட்களை கண்காட்சியாக காட்சிப்படுத்தினர். படம் வரும் பொங்கல் பண்டிகை வாரத்தை முன்னிட்டு ஜன., 14ல் வெளியாகிறது. இதற்காக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜனவரி 3ம் தேதியன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.