உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா

மம்முட்டி நடிக்க வேண்டிய படத்தில் ஜீவா

நடிகர் ஜீவா மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிளாக் இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி மற்றும் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஜீவா நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் 'தலைவர் தம்பி தலைமையில்' என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். விஷ்ணு விஜய் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜீவா நடிப்பதற்கு முன்பு இதன் கதையை நிதிஷ் சகாதேவ், மலையாள நடிகர் மம்முட்டியிடம் கூறியுள்ளார். அவருக்கும் பிடித்திருந்ததாம். ஆனால், அந்த காலகட்டத்தில் அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இதில் அவர் நடிக்கவில்லை. இதன் பின்னர் தான் இந்த கதை ஜீவாவிற்கு வந்துள்ளது. இப்படம் ஜீவாவிற்கு கம்பேக் படமாக அமையும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !