உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா

ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் மங்காத்தா

கடந்த 2011ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, வைபவ், அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'மங்காத்தா'. அஜித் நெகட்டிவ் கலந்த வேடத்தில் அசத்தினார். பில்லா படத்திற்கு பின் அஜித்திற்கு மீண்டும் ஒரு கம்பேக் படமாக இப்படம் அமைந்தது. மேலும் இது அஜித்தின் 50வது படமாக வெளியாகி வெற்றி பெற்றது. ஓரிரு ஆண்டுகளாக பழைய படங்கள் ரீ-ரிலீஸாகி வருகின்றன. அதிலும் இந்தாண்டு அதிகளவில் ரீ-ரிலீஸ் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

இந்தாண்டு அஜித்தின் அட்டகாசம், பில்லா உள்ளிட்ட சில படங்கள் வெளியானது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து காத்திருந்த 'மங்காத்தா' படத்தை வரும் ஜனவரி 23ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !