உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 47வது படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா

47வது படத்தில் மீண்டும் போலீஸ் வேடத்தில் சூர்யா

நடிகர் சூர்யா தற்போது அவரின் 47வது படத்தின் படப்பிடிப்பை கடந்த வாரத்தில் பூஜை நிகழ்வுடன் துவங்கினார். இந்த படத்தை 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கான புரொமோ சூட் எனப்படும் அறிமுக வீடியோவிற்கான படப்பிடிப்பு கேரளாவில் துவங்கியுள்ளது. இதில் சூர்யா போலீஸ் சீருடையில் கலந்து கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு சூர்யா மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !