உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசன் பட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி

அரசன் பட படப்பிடிப்பில் விஜய் சேதுபதி

தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'அரசன்'. இதை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கோவில்பட்டியில் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படப்பிடிப்பில் ஆண்ட்ரியா இணைந்தனர். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி வந்து வெற்றிமாறன், சிம்பு இருவரையும் நட்பு ரீதியாக சந்தித்து பேசியதை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார். இன்னும் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரசன் படத்தில் ஹார்ட் பீட் வெப் தொடர், டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான யோகலட்சுமியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !