உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தர்மேந்திராவின் கடைசி படம் ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ்

தர்மேந்திராவின் கடைசி படம் ஆங்கில புத்தாண்டில் ரிலீஸ்

ஹிந்தியில் அந்தாதூண், மேரி கிறிஸ்துமஸ் என பல படங்களை இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். தற்போது இக்கிஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் 1971-ல் இந்தோ- பாகிஸ்தான் போரில் வீர மரணம் அடைந்த அருண் கேத்திர பால் என்பவரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ளது. தனது 21 -வது வயதிலேயே வீரம் மரணம் அடைந்த இவர் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர். இப்படத்தில் அருண் கேத்திர பால் வேடத்தில் அகஸ்திய நந்தா நடித்துள்ளார். அவரது தந்தையாக சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் தர்மேந்திரா நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் இதுவாகும். இந்த நிலையில் இன்று இக்கிஸ் படத்தின் டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் தர்மேந்திரா நடித்துள்ள பல காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !