நானிக்கு ஜோடியாகும் கயாடு லோகர்!
‛தசரா' பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் நானி, 'தி பாரடைஸ்' படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் க்ளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகரான மோகன் பாபு நடித்து வருகிறார். இதுவரை இந்த படத்தில் கதாநாயகி யார் என்பது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க டிராகன் படத்தின் மூலம் பிரபலமான கயாடு லோகர் இணைந்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை 40 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.