தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்!
ADDED : 20 days ago
ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் 'காவாலா' என்ற பாடலுக்கு நடனமாடிய தமன்னா, அதன்பிறகு ஹிந்தியிலும் 'ரைய்டு-2' என்ற படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் 5 படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தமன்னா, தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
இப்படியான நிலையில் நேற்று தமன்னா தனது 36வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமன்னாவின் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள்.