டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால்
ADDED : 17 days ago
கோதண்டம் அண்ட் கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், பாரதிராஜாவின் உதவியாளர் குரு இயக்கியுள்ள படம் “பருத்தி”. இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 25ம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது.
இவ்விழாவினில் நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது : 'பருத்தி' எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன். ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.