உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி

பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி

ராதாரவி பெரும்பாலும் குணசித்ர மற்றும் வில்லன் வேடங்களில் தான் நடித்துள்ளார். அரிதாக ஒரு சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதிலும் அவர் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ஒரே படம் 'வீரன் வேலுத்தம்பி'. மலையூர் மம்பட்டியான், கும்பக்கரை தங்கய்யா படங்களின் வரிசையில் வந்த படம் இது.

இதனை ராம நாராயணன் தயாரித்து, இயக்கி இருந்தார். ராதாரவி வேலுத்தம்பியாக நடித்திருந்தார். அவருடன் அம்பிகா, ரேகா, சந்திரசேகர், ஜெய்கணேஷ், ஏவிஎம்.ராஜன் நடித்திருந்தனர். விஜயகாந்தும், கார்த்திக்கும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள். மு.கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதியிருந்தார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !