உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம்

மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம்

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக் ஷய் நடித்த சிறை படம் நாளை ரிலீஸ் என்றாலும், பலருக்கும் படத்தை முன்னமே போட்டு காண்பித்துவிட்டதால் படத்தை பற்றி கோலிவுட்டில் டாக் அதிகமாக பகிரப்படுகிறது. படம் பார்த்தவர்கள் சிறையை புகழ்கிறார்கள். படத்தின் கதை, நடிப்பு நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இது விக்ரம் பிரபு நடித்த 25வது படம் என்பதால் அவர் தந்தையும், நடிகருமான பிரபு படம் பார்த்த தனது நண்பர்களிடம் ரிசல்ட் குறித்து ஆர்வமாக விசாரித்து வருகிறாராம். தவிர, தனது நட்பு வட்டாரத்துக்கு சிறை குறித்த தகவல்களை விரிவாக சொல்லிவிட்டு, படம் பாருங்கள் என்கிறாராம்.

விக்ரம் பிரபுவின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைப்பது தந்தையாக அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்து இருக்கும் அக் ஷய், லியோ, மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் மகன். எனவே, அவரும் திரையுலகில் தனக்கு வேண்டியவர்கள், நண்பர்களிடம் சிறை குறித்து பெருமையாக சொல்கிறாராம். இவர் விஜய்க்கு நல்ல நண்பர் என்பதால் விரைவில் சிறை குழுவை விஜய் சந்திப்பார் அல்லது படம் குறித்து ஏதாவது பாசிட்டிவ் கருத்து சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசாக விக்ரம்பிரபு, கைதியாக அக் ஷய் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !