மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய்
விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இதுவரை படம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வும் நடக்கவில்லை. மலேசியாவில் வரும் 27ம் தேதி படத்தின் பாடல் வெளியீட்டுவிழா நடக்கிறது. அதற்காக மலேசியா செல்ல படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இது விஜயின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால், இதுதான் கடைசி பாடல் வெளியீட்டுவிழா என்றும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார். அவர் சம்பந்தப்பட்ட கடைசி சினிமா விழா என்பதால் உணர்ச்சி வசப்பட்டு பேசுவாரா? குட்டி கதை சொல்வாரா? பாடல் பாடுவாரா? அல்லது காரசார அரசியல் பேசுவாரா? மறைமுகமாக யாரையாவது தாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆகவே, விஜயின் பேச்சை அவருடைய ரசிகர்கள், தொண்டர்கள், திரையுலகினர் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சினிமாவை விட்டு விலகும் விஜய், பழைய விஷயங்களை பேசி, பலருக்கு நன்றி சொல்லி கண்கலங்கவும் வாய்ப்பு என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.