இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கயாடு லோகர் இணைந்து நடித்துள்ள படம் 'இம்மார்ட்டல்'. இதில் டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஜி.வி. பிரகாஷ், கயடு லோகர் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். ஆரம்பத்தில் காதல் படம் போன்ற தோற்றத்தை காட்டி பின் ஒருநாள் எதிர்பாராத விதமாக அமானுஷ்ய விஷயங்கள் அந்த வீட்டில் நடைபெறுகிறது. அதன் பின்னர் என்ன என்பதே மீதி கதைக்களம். இதில் குறிப்பாக ஒரு வித்தியாசமான மிருகத்தை காட்டியுள்ளனர். பின்னனி இசையில் சாம்.சி.எஸ் அவருக்கான பாணியில் நன்றாக இசையமைத்துள்ளார். மிஸ்ட்ரி, த்ரில்லர் கதை களத்தில் உருவாகும் இந்த படம் உருவாகியுள்ளது. டீசர் வெளியான 20 மணிநேரத்தில் 44 லட்சத்திற்கும் அதிகமான பார்வை யுடியூப் தளத்தில் கிடைத்துள்ளது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் இதன் டீசரை வெளியிட்டுள்ளனர்.