விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா
நடிகை மல்லிகா தமிழில் திருப்பாச்சி, ஆட்டோகிராப், உனக்கும் எனக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவை அல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் பற்றி அவர் கூறியதாவது, விஜய் மிகவும் அமைதியானவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், அரசியலுக்கு வந்தால் நிறைய பேசிக்கிட்டே இருக்கணும். அவரோட அமைதியான குணத்தை விட்டு மக்களுக்காக இப்போது பேச ஆரம்பித்துள்ளார் . அவரா இப்படிப் பேசுகிறார்? என ஆச்சர்யமா உள்ளது.
சினிமாவில் உச்சத்தில் உள்ளவர், அது எல்லாம் விட்டு மக்களுக்காக நல்லது பண்ண அரசியலுக்கு வந்துள்ளார். இப்படிப்பட்ட நபரை புரிந்து கொள்ளாமல், கரூர் பிரச்னையில் சிலர் தப்பா பேசுகிறார்கள். அதைப் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக உள்ளது . அதில் அரசியல் சதி உள்ளதாக நான் நினைக்கிறேன். அவருடைய வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறார்கள் என கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.