உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர்

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இதே கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்கள் அல்லாமல் இந்த படத்தில் புதிதாக எஸ்.ஜே.சூர்யா, பாலிவுட் நடிகை வித்யாபாலன், சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது. இந்த நிலையில் இதில் ஷாருக்கான் நடித்துள்ளார் என்பதை இதில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் மிதுன் சக்கர்போர்தி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !