‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி
ரூபா ஐயர் இயக்கம், தயாரிப்பில் ஸ்ரேயாஸ் தல்பே, ரூபா ஐயர், சுரேஷ் ஓபராய், இந்திரா திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஆசாத் பாரத்'. சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
இந்த படம் குறித்து இந்திரா திவாரி கூறுகையில், ‛‛இந்த கதையை கூறும்போதே என் ஆழ் மனதை பாதித்தது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் வரலாற்று பாடங்களுக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் அளவற்ற தியாகம், தைரியம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் பயணங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்தக் கதை என்னை உணர்ச்சிப்பூர்வமாக நெகிழச் செய்தது. இந்த படம் சுதந்திரத்தை மிகைப்படுத்திக் காட்டாமல், அதற்காக செலுத்தப்பட்ட பெரும் விலையை நேர்மையாகச் சித்தரிக்கிறது. இன்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படும் மதிப்புகளை பார்வையாளர்களுக்கு நினைவூட்டும். இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை. அந்த காலத்தின் சமூகச் சூழலை, அதாவது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், பேசினார்கள், பயந்தார்கள் மற்றும் நம்பினார்கள் என்பதைப் புரிந்து கொள்வதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டு நடித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.