ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம்
ADDED : 10 hours ago
வினோத் இயக்கத்தில் விஜய் அவரது கடைசி படமாக அறிவித்து நடித்துள்ள படம் 'ஜனநாயகன்' . இதில் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து 'ஜன நாயகுடு ' என்கிற தலைப்பில் வெளியிடுகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்வதாக இருந்தனர். ஒரு சில காரணங்களால் இதன் விநியோக பணிகளில் இருந்து இந்நிறுவனம் வெளியேறினர். தற்போது பி.வி.ஆர், ஐநாக்ஸ் நிறுவனம் விநியோகம் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர்.