குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே
ADDED : 10 hours ago
மின்னல் முரளி, ஆரண்ய காண்டம், குடும்பஸ்தன், ஜோக்கர், பாட்டில் ராதா உள்ளிட்ட படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையால் பெயர் பெற்றவர் குரு சோமசுந்தரம். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் இணைந்து மலையாள நடிகை அனுமோல் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு 'பாரிஸ் கபே'. சரஞ் நீலன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு முகமூடி பட இசையமைப்பாளர் கே.கே எனப்படும் கிருஷ்ண குமார் என்பவர் இசையமைக்கிறார். ஏற்கனவே குரு சோமசுந்தரம், அனு மோல் இணைந்து ராணி தி ரியல் ஸ்டோரி என்கிற மலையாள படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.