மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்துள்ள படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 1960 களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனும், அதர்வாவும் அண்ணன் - தம்பியாக நடித்துள்ள இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஜனவரி 14-ல் வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள் தற்போது ஜனவரி பத்தாம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி இருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், சில காட்சிகளை கோடிட்டு காட்டி அவற்றை கத்தரிக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால் இதற்கு இயக்குனர் சுதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த காட்சிகளை நீக்கினால் கதையின் ஜீவனே போய் விடும் என்று சொல்லி தற்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.