ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த படம் கூலி. இதில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வந்த இப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. என்றாலும் 350 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 600 கோடி வரை வசூலித்தது. மேலும் இப்படத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் உபேந்திரா பெரிய அளவில் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அதுகுறித்து கூறுகையில், கூலி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தது ஏன் என்று பலரும் என்னை கேட்கிறார்கள். கூலி படத்தில் நான் நடித்த வேடம் ரஜினியின் அடியாள் போல் இருந்ததாக ரசிகர்கள் பெரிய அளவில் ட்ரோல் செய்தார்கள். என்றாலும் என்னை பொறுத்தவரை ரஜினி படம் என்பதால் மட்டுமே கூலி படத்தில் நடித்தேன். அவரது தீவிரமான ரசிகன் என்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்பது ஒரு கனவாகவே இருந்து வந்தது. அதோடு, கூலி படத்தில் முதலில் ஒரு சண்டைக் காட்சியில் மட்டுமே என்னை நடிக்க அழைத்தார்கள். ஆனால் பிறகு அந்த ரோலை பெருசுபடுத்தினார்கள். என்னை பொறுத்தவரை ரஜினி படத்தில் ஒரு சிறிய சீனில் நடிப்பதை கூட பெரும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வேன் என்கிறார் உபேந்திரா.