டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா
ADDED : 7 hours ago
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்ருதிஹாசன். நடிப்பு தாண்டி இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். நிறைய பாடல்களும் பாடி உள்ளார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரெயின் படத்தில் “கன்னக்குழிக்காரா” என்ற பாடலை ஸ்ருதி பாடி உள்ளார். கபிலன் பாடலை எழுதி உள்ளார். மிஷ்கினே இசையமைத்துள்ளார்.
“கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. இந்தபாடல் இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுள்ளது. யுடியூப் தளத்தில் ஒரு நாளில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.