உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை

நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை


அர்ஜுன் ரெட்டி, இட்லி கடை உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் விலங்குகள் நல அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற 'நாய்களை தத்தெடுங்கள், விலைக்கு வாங்காதீர்கள்' என்கிற பீடா அமைப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஷாலினி பாண்டே.

அப்போது பேசிய அவர், “என்னுடைய செல்ல நாய்க்குட்டி பெயர் பிர். இதை நான் கடந்த 2021ல் ஹிமாச்சலில் இருந்து காப்பாற்றி, கொண்டுவந்து வளர்க்கிறேன். நாய்களுடன் பழகிய இந்த சில வருடங்களில் தான், நான் இன்னும் சிறந்த மனித நேயம் கொண்டவளாக மாறி இருக்கிறேன். உயர்ந்த ரக நாய்களை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக தெருவில் இருக்கும் நாய்களை தத்தெடுத்து வளருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !