சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை
ADDED : 10 minutes ago
பைசன் பட நடிகை, கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் எதிர்பார்த்தபடி, வியாபாரம் ஆகவில்லை. இதனால், அவரது படக்கூலியை பாதியாக குறைத்து விட்டனர். இதன் காரணமாக செம கடுப்பில் இருக்கும், அம்மணி, 'பெரிய கம்பெனி என்பதால் கேட்டபோதெல்லாம், 'கால்ஷீட்' கொடுத்து நடித்தேன். இப்போது அவர்கள் புத்தியை காட்டி விட்டனர்...' என்று தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம், அந்த இரண்டெழுத்து பட நிறுவனத்தை கடுமையான வார்த்தைகளால் வசை பாடி வருகிறார்.
அதோடு, 'இனிமேல் எந்த ஒரு படமாக இருந்தாலும், 'கிளைமேக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே, மொத்த பணத்தையும் வெட்டினால் தான் படப்பிடிப்பு தளத்துக்கே வருவேன்...' என்று, 'கண்டிஷன்' போட்டு வருகிறார், நடிகை.