'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது?
ADDED : 4 hours ago
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இப்படம் 1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர்.
இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரி 10ந் தேதியன்று திரைக்கு வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை முதலில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது ஒரு சில காரணங்களால் இதன் இசை வெளியீட்டு விழாவை வருகின்ற ஜனவரி 3ம் தேதியன்று சாய்ராம் கல்லூரியில் மாலை வேளையில் நடத்த முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.