உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா

ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா


இயக்குனர் சுதா கொங்கரா 'துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று' ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர்களை வைத்து 'பராசக்தி' எனும் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜனவரி 10ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

இதையொட்டி சுதா கொங்கரா யூடியூப் தளத்தில் பல சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் சுதா கொங்கரா கூறியதாவது, எனக்கு ஒரு முழு நீள காதல் கதையை உருவாக்க ஆசை உள்ளது. அதற்கான கதை தயாராகவுள்ளது. திரைக்கதை எழுத வேண்டியுள்ளது. நான் ரஜினி சாரின் தீவிரமான ரசிகை. ரஜினி சாரை வைத்து முதல் மரியாதை போன்று ஒரு படத்தை உருவாக்க ஆசை. என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2025-12-28 17:20:26

முதலில் அதை பண்ணினா நல்லா இருக்கும்.. இல்லைனா jailer ஆட்டம் இன்னும் படையப்பா nu நினைச்சு கிட்டு நான் மாணிக் Basha nu கூவி கிட்டு நான் ஒரு தடவை சொன்ன அது ஒரு தடவை கூட இல்லை னு புரிஞ்சா சரி. Rajini apoadi நடிச்சா அவர்க்கு முதல் மரியாதை தான்... Engayo கேட்ட குரல்.. 6 to 60 வரை.. முள்ளும் மலரும்.. Nallavanukku நல்லவன் படம் எல்லாம் ஞாபகம் வருது...