உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி

'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி


'கேஜிஎப் 2' படத்திற்கு பிறகு யஷ் நடிக்கும் பான் இந்தியா படம் 'டாக்சிக்'. கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, ஹுமா குரேஷி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். படத்தின் வெளியீடு 2026 மார்ச் 19 என தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தில் ஹூமா குரேஷி, 'எலிசபெத்' எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !