உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்!

விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்!


விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வந்த படம் 'சிறை'. இந்த படத்தை சுரேஷ் ராஜகுமாரி என்பவர் இயக்கி உள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இந்த சிறை படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், 'சிறை படத்தை பார்த்தேன். மனதுக்கு நிறைவாக உள்ளது. இந்த மாதிரியான கதைகளை எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியல், எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவுக்கு மாற்ற வேண்டும் என்பதை உணர்ந்த படைப்பாளியின் வருகை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு நம்பிக்கையும் துணிச்சலையும் கொடுக்கும். அந்த அளவுக்கு இந்த படம் ஒரு அசாத்தியமான படைப்பாக உள்ளது.

முதல் படத்திலேயே ஒரு பாய்ச்சலை நிகழ்த்திருக்கும் இயக்குனர் மற்றும் இதுபோன்ற கதைகள்தான் எனக்கு வேண்டும் என்று களம் இறங்கி இருக்கும் விக்ரம் பிரபுவுக்கும், தயாரிப்பாளருக்கும், சிறந்த இசையை கொடுத்திருக்கும் ஜஸ்டின் பிரபாகருக்கும் வாழ்த்துக்கள், நன்றி' என பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், சிறை படத்துக்காக நிச்சயம் திரையரங்குகள் நிரம்ப வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !