பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு
ADDED : 11 hours ago
நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' என்ற படத்தின் மூலம் மீண்டும் கன்னட மொழி படத்தில் நடிக்கிறார்.
ஹேமந்த் ராவ் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக சிவராஜ் குமார் நடிக்கிறார். 70களின் காலகட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் பிரியங்கா மோகனின் தோற்றம் குறித்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் இருக்கும் பிரியங்கா மோகனின் லுக் வைரலாகியுள்ளது.