உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி


'பராசக்தி'க்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் வெங்கட் பிரபு இயக்குகிறார். சயின்ஸ் பிக்ஷனுடன் கூடிய டைம் டிராவல் கதை கொண்ட இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'ஹீரோ' என்ற படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன், பிறகு வெங்கட் பிரபு இயக்கிய 'மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார். இப்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தற்போது கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் திரவியம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ரவி மோகனுடன் நடித்த 'ஜீனி' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'டாணாக்காரன்' படத்தின் இயக்குனரும், 'சிறை' படத்தின் கதாசிரியருமான நடிகர் தமிழ் இயக்கும் 'மார்ஷல்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !