உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக்

லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக்


உலகம் முழுவதும் பிரபலமான 'டைட்டானிக்' படத்தில் அறிமுகமானவர் கேத் வின்செல்ட். அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் வென்றார். தற்போது 'குட் பை ஜூன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் சில காலம் லெஸ்பியனாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த நேர்காணலில் அவர், சிறுவயதில் எனது முதல் நெருக்கமான அனுபவங்கள் பெண்களுடன் மட்டுமே இருந்தது. அந்த காலக்கட்டத்தில் நான் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளிடம் முத்தங்களை பரிமாறிக்கொண்டேன். அப்போது நான் பெண்களிடம் அதிக ஆர்வத்துடன் இருந்தேன். குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் ஈடுபாடு காட்டவில்லை. இதுபோன்ற எனது அனுபவங்கள், 'ஹெவன்லி கிரியேச்சர்ஸ்' என்ற படத்தில், இரு பெண்களுக்கு இடையிலான ஆழமான மற்றும் தீவிரமான உறவை வெளிப்படுத்தும் கேரக்டரில் தத்ரூபமாக நடிக்க உதவியது.

புகழின் உச்சியில் இருப்பதை விட, மரங்களின் நிழலில் எனது நண்பர்களுடன் பணிகளை மேற்கொள்வதையே பெரிதும் விரும்புகிறேன் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !