உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள்

எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள்


டி.ராஜேந்தரால் 'மோனிஷா என் மோனாலிசா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மும்தாஜ். அதன் பிறகு 'குஷி', 'சாக்லேட்', 'லண்டன்' உள்பட பல படங்களில் நடித்தார். நாயகி வாய்ப்புகள் குறையவே கவர்ச்சி வேடங்களிலும் நடித்தார்.

சில வருடங்களுக்கு முன்பு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஆன்மிக விஷயங்களில் நாட்டம் காட்டினார் . இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அவர் இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் கடமையை முடித்து முழுமையான இஸ்லாமிய பெண்ணாக மாறியிருக்கிறார்.

என்றாலும் அவரது பழைய கவர்ச்சி படங்கள் இன்னமும் இணையத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 'எனது பழைய படங்களை பகிராதீர்கள்' என்று மும்தாஜ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :

16 வயதில் சினிமாவுக்கு வந்தேன் பல படங்களில் நடித்தேன். சினிமாவில் நடிப்பது என்பது ஒரு தொழில் ஒரு கேரக்டராக மாறி அந்த கேரக்டரில் நடிப்பதோடு நமது பணி முடிந்து விட்டது என்று கருதினேன்.

இஸ்லாமிய பெண்ணான நான் திரைப்படங்களில் நடிப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை புரிந்து கொண்டு நடிப்பதை நிறுத்த முடிவு செய்தேன். என்றாலும் நடிப்பு தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாததால், சில உடைகளை அணிய மாட்டேன், சில கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். அதனை மற்றவர்கள் ஏற்பதாக இல்லை. அதனால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.

இப்போது சாதாரண ஒரு இஸ்லாமிய பெண்ணாக குர்ஆன் ஓதுவது, ஹிஜாப் அணிவது, எளிய உணவுகளை உட்கொள்வது என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

என்னை நேசிக்கிற மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், என்னோட பழைய போட்டோஸ், வீடியோஸை ஷேர் பண்ணாதீங்க. என் மனமாற்றத்துக்கு மதிப்பு கொடுங்க. என் வயசுக்கு, என் உடைக்கு, என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க'' என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (7)

ram, mayiladuthurai
2026-01-06 11:38:29

ஊருக்கு உபதேசம்.


Bala Paddy, CHICAGO
2026-01-03 00:17:23

ஹ்ம்ம்ம் இது அல்லவோ நடிப்பு இவருக்கு தேசிய விருது கொடுங்கப்பா அடுத்து என்ன அவதாரமோ


Shekar, Mumbai
2026-01-02 09:55:52

என்னது கொக்கு சைவமாகிருச்சா?


amsi ramesh, hosur
2026-01-02 09:40:37

நடிப்பில் சம்பாதித்து அனைத்தைம் அனாதைகளுக்கு கொடுத்துவிடவும்


KayD, Mississauga
2026-01-02 03:54:49

ஆடின காலும் பாடின வாயும் சும்மா வே இருக்காது னு தான் என்று சொல்லுவாங்க . இவுங்க வேஷம் தான் போடறாங்க மதம் பேர்ல . இந்த போட்டோ கூட போட்டோஷூட் பண்ண மாதிரி தான் இருக்கு. இப்படி யாரும் உண்மையா மாறி இருந்தால் போஸ் கொடுத்து கிட்டு இருக்க மாட்டாங்க


Surya krishna
2026-01-01 20:40:19

எல்லா நடிகர்களும் இயக்குனர்களும் இவளை பார்த்து சொன்னது சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்று. மார்க்கெட்டு இல்லாது போன மும்தாஜ் மதத்தை தீவிரமாக பின்பற்ற பின்பற்றுவதாக நாடகம் ஆடுகிறார். முழுசா நனைந்த பின்பு முக்காடு எதுக்கு? இதுல வெட்டி விளக்கம் வேற


Anand, chennai
2026-01-01 19:08:54

முழுசா நனைந்த பிறகு முக்காடு....