உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சாய் அபயங்கரின் ‛ரதிமா' ஆல்பத்திற்கு வரவேற்பு

சாய் அபயங்கரின் ‛ரதிமா' ஆல்பத்திற்கு வரவேற்பு

சமீபகாலமாக தனியிசை பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனியிசை ஆல்பம் மூலம் பிரபலமாகி இன்று முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் சாய் அபயங்கர். இவரின் கட்சி சேர, ஆச கூட உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் ஹிட்டாகின. கடைசியாக இவரது தனியிசை ஆல்பமாக வந்த பவழமல்லியும் ஹிட்டானது.

இப்போது இவரது 6வது தனியிசை ஆல்பமாக ரதிமா வெளியாகி உள்ளது. இதற்கு சாய் அபயங்கரே இசையமைத்து பாடி உள்ளார். பாடல்களை விவேக் எழுதி உள்ளார். ஆல்பத்தை தேஜோ இயக்கி உள்ளார். பொதுவாக சாய் அபயங்கரின் ஆல்பங்களில் நடிகைகளும் ஹிட்டாவர். இந்த ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அவருடன் ஆடி உள்ளார். பாடல் வெளியான 20 மணிநேரத்தில் 30 லட்சம் பார்வைகளை இந்த பாடல் யுடியூப்பில் பெற்றுள்ளதை பார்க்கையிலேயே இதன் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !